Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகத்தில் 19 மாவட்டங்களில் மழை – மஞ்சள் எச்சரிக்கை

கர்நாடகத்தில் 19 மாவட்டங்களில் மழை – மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு: ஜூன் 15 –
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு உட்பட 19 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மதியம் மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் பெங்களூருவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, தெற்கு உள் மற்றும் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம் ஆகியவை அடங்கும்.
மாண்டியா, மைசூர், ராமநகரா, கோலார், சிக்கபல்லாபூர், விஜயநகர், தட்சிண கன்னடா, உடுப்பி, பெல்லாரி, தாவங்கரே, ஷிமோகா, சிக்கமகளூரு, சாமராஜநகர், ஹாசன், சித்ரதுர்கா மற்றும் குடகு ஆகிய மாவட்டங்கள் அடங்கும். கனமழை காரணமாக பெங்களூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இது தொடர்பாக ஏற்கனவே கர்நாடக அரசு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது இதன்படி கனமழை பாதிப்பு உள்ள பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு எடுக்க வேண்டிய அனைத்து விதமான முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரில் இதற்கு முன்பு கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது