
வாஷிங்டன்: ஜூலை 30-
தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இதன் காரணமாக இன்று அதிகாலை முதல், ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்பதால், நிலைமை மோசமடைந்திருக்கிறது.
இந்த வார தொடக்கத்தில் ஜோர்டனில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்தின் மீது, கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தற்போது தாக்குதல் தொடங்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தரப்பு தெரிவித்திருக்கிறது. ஈரான் வீசிய அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளும் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், இருப்பினும் எதிர்க்கால அச்சுறுத்தலை தவிர்க்கவே தற்போது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து பேசியிருந்த டிரம்ப், நாங்கள் ஈரான் மிகவும் கடுமையாக தாக்கப்போகிறோம் என்று எச்சரித்திருந்தார்.எங்கள் நாட்டின் படைகள் மீதான தாக்குதலை நாங்கள் லேசாக எடுத்துக்கொள்ள மாட்டோம். கடுமையான பதிலடியை கொடுப்போம் என்று கூறியிருக்கிறார். ஈரான் மீதான நேரடி தாக்குதல் ஒருபுறம் நடத்தப்படும் அதே நேரத்தில், மறுபுறம் ஈராக் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுக்கள் மீது.. சவுதி மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றன.
இந்த மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7%க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு இந்தியா உள்ளிட்ட நாடுகளை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.













