கர்நாடகம் உட்பட7 மாநிலங்களில் மீண்டும் கனமழை

புது டெல்லி, டிச. 9: கடும் குளிருக்கு மத்தியில் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் 7 மாநிலங்களில் அடுத்த 2-3 நாட்களில் மழை பெய்து குளிர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மலைப்பாங்கான மாநிலங்களில் பனிப்பொழிவு காரணமாக குளிரின் தீவிரம் அதிகரிக்கும். வடஇந்தியாவின் சில மாநிலங்களில் மழையும், சில மாநிலங்களில் அடர்ந்த மூடுபனியும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை கடற்கரையை அடையும். டிச. 12 ஆம் தேதிக்குள், இப்பகுதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு அருகில் ஒரு சூறாவளி புயலாக மாறும்.
இதன் காரணமாக, டிச. 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரப் பிரதேசத்தின் தென் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்யும். அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும்.ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், இமயமலை, மேற்கு வங்கம், சிக்கிம், இமாச்சல பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குளிர் அலை நிலவக்கூடும். இதனால் இந்த மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் என தெரிவித்துள்ளது.