காங்., மூத்த தலைவர் சர்ச்சை கருத்து

புதுடில்லி: ஜனவரி 7-
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்து, அமெரிக்க படைகள் நாடு கடத்திய நிலையில், ‘’பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிறை பிடித்து நாடு கடத்துவாரா?’’ என, காங்., மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான், 79, கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை, அந்நாட்டின் தலைநகர் கராகஸ் நகரில் வைத்து, அமெரிக்கப் படையினர் கைது செய்து, சமீபத்தில் நாடு கடத்தினர்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டின் மீது, சில மாதங்களுக்கு முன், 50 சதவீதம் வரி விதித்தார். மேலும் அதிகரிக்கப் போவதாக சமீபத்தில் அவர் தெரிவித்தார்.