காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்துஎகிப்தில் பேச்சுவார்த்தை

எகிப்து: அக்டோபர் 13-
காசாவில் அமைதியை நிலை நிறுத்துவது தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒப்பந்தம் போடப்படவுள்ளது. எகிப்த் நாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் நாடு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்திற்கும் – ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயரிந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தும், வீடுகளை இழந்தும் தவித்து வருகிறார்கள்.
காசா மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருந்து ஆதரவுக் குரல் நீண்டு வருகிறது.
எகிப்தில் பேச்சுவார்த்தை காசா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து காசாவில் அமைதியை கொண்டு வருவதற்காக, டிரம்ப் 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தை வெளியிட்டிருந்தார். இதனை ஏற்பதாக இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இதன்படி கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில் காசா அமைதி ஒப்பந்தம் எகிப்து நாட்டில் இன்று கையெழுத்தாகிறது. அப்போது இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது. இதில் டிரம்ப், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சி.சி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.