காசோலைக்கு உடனே பணம்

புதுடெல்லி : அக். 4-
காசோலையை வங்​கி​களில் டெபாசிட் செய்​தால் இனி நாள் கணக்​கில் காத்​திருக்க வேண்​டிய அவசி​யமில்​லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்​கும் வசதியை வங்​கி​கள் இன்று முதல் அமல்​படுத்த உள்​ளன.
விரை​வான மற்​றும் பாது​காப்​பான பணம் செலுத்​து​வதற்​கான புதுப்​பிக்​கப்​பட்ட தீர்வு கட்​டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவ​மைத்​துள்​ளது. இதைத் தொடர்ந்து எச்​டிஎப்​சி, ஐசிஐசிஐ உள்​ளிட்ட தனி​யார் வங்​கி​கள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்​று​வதற்​கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் (அக்​.4) தொடங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அதன்​படி, அக்​டோபர் 4 முதல் டெபாசிட் செய்​யப்​படும் காசோலைகள் இனி இந்த புதிய முறை​யின் கீழ் ஒரே நாளில் பரிசீலிக்​கப்​பட்டு பணம் சில மணி நேரங்​களுக்​குள் வாடிக்​கை​யாளர்​களின் கணக்​கில் வரவு வைக்​கப்​படும். காசோலைகள் பவுன்ஸ் ஆவதை தடுக்​க​வும், தாமதங்​கள் அல்​லது நிராகரிப்பு செய்​யப்​படு​வதை தவிர்க்​க​வும் காசோலை​யில் அனைத்து விவரங்​களை​யும் துல்​லிய​மாக நிரப்​பப்​படு​வதை உறுதி செய்​யும்​படி வாடிக்​கை​யாளர்​களை இந்த இரு தனி​யார் துறை வங்​கி​களும் அறி​வுறுத்​தி​யுள்​ளன.பாசிட்​டிவ் பே சிஸ்​டத்தை பயன்​படுத்தி பாது​காப்பை மேம்​படுத்​த​வும், சரி​பார்ப்​புக்​கான முக்​கிய காசோலை விவரங்​களை முன்​கூட்​டியே சமர்ப்​பிக்க வேண்​டும் என்​றும் வாடிக்​கை​யாளர்​களிடம் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. ரூ.50,000- க்கும் அதி​க​மான காசோலைகளை டெபாசிட் செய்​வதற்கு குறைந்​தது 24 மணி வேலை நேரத்​திற்கு முன்​ன​தாக கணக்கு வைத்​திருப்​பவர்​கள் கணக்கு எண், காசோலை எண், தேதி, தொகை மற்​றும் பயனாளி​யின் பெயரை வங்​கிக்கு வழங்க வேண்​டும்.