பெங்களூரு, ஏப்ரல் 26-
காதல் மோகத்தில் இளம் பெண்ணை சித்திரவதை செய்து, கத்தியால் குத்தியதாக கூறப்படும் காமவெறி பிடித்த மென்பொருள் பொறியாளரை பனசங்கரி கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி ஸ்ரீகாந்த் (45). ஸ்ரீகாந்த் திருமணமானவர், 20 வயது கல்லூரிப் பெண்ணை தன்னை தன்னை காதலிக்குமாறு கூறி துன்புறுத்தி வந்தார்.
இது குறித்து அந்த இளம் பெண் ஸ்ரீகாந்த் மனைவியிடம் புகார் அளித்தார். ஆனால் இது எந்தப் பயனும் இல்லை. அந்த இளம் பெண் தனது காதலை நிராகரித்ததால் அந்த தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீகாந்த் கோபமடைந்தார்.
மூன்று நாட்களுக்கு முன்பு, அந்த இளம் பெண் தேவகவுடா பெட்ரோல் பங்க் அருகே மற்றொரு இளைஞருடன் நின்று கொண்டிருந்தார். அந்த தொழில்நுட்ப வல்லுநரும் இதைக் கவனித்திருந்தார். அவள் வேறொரு இளைஞனைக் காதலிக்கிறாள் என்பதை அறிந்துகண்டு கடும் கோபம் அடைந்து கத்தியை காட்டி மிரட்டி இருக்கிறான் நீ என்னை தான் காதலிக்க வேண்டும் என்று மிரட்ட விடுத்து இருக்கிறான்.
பாதிக்கப்பட்ட பெண் பனசங்கரி காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், பனசங்கரி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.