
இந்தூர்: பிப்ரவரி 18-
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீஸாருக்கு புகார் வந்தது.
போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கு 24 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியபோது அந்த வீடு துவாரகபுரியைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் பியூஷ் தம்னோட்டியா என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த பியூஷை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து இந்தூர் போலீஸ் துணை கமிஷனர் கிருஷ்ணாலால் சாந்தினி கூறியதாவது: பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் அருகே கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் அப்பெண்ணை பியூஷ் தனது வீட்டுக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.அங்கு ஒரு ஓட்டலில் இரவு தங்கி மாந்தீரிக சடங்குகளை செய்து அந்தப் பெண்ணின் ஆவியைத் திரும்ப அழைத்து பேச முயற்சித்துள்ளார். அந்தப் பெண்ணின் செல்போனையும் உடைத்து அழித்துவிட்டார்.
அந்தப் பெண் மற்ற ஆண்களுடன் பேசியதால் எழுந்த சந்தேகம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரிகிறது. கொலை நடந்த தினத்தில் உடலுறவுக்கு அந்தப் பெண்ணை அழைத்துள்ளார்.
ஆனால், அவர் மறுக்கவே, உனக்கு திடீர் பரிசு தருகிறேன் என்று பெண்ணின் கண்ணை கட்டிவிட்டு பின்னர் கொலை செய்துள்ளார். பின்னர் உயிரற்ற சடலத்துடன் அவர் உடலுறவு கொண்டதாகத் தெரிகிறது. இவ்வாறு கிருஷ்ணாலால் சாந்தினி தெரிவித்தார்.














