Home மாவட்டங்கள் பெங்களூர் காய்ச்சல், சளி, தொண்டை வலியுடன் மக்கள் அவதி: கரோனா தொற்று பாதிப்பு காரணமா?

காய்ச்சல், சளி, தொண்டை வலியுடன் மக்கள் அவதி: கரோனா தொற்று பாதிப்பு காரணமா?

சென்னை: மே 23 –
காய்ச்​சல், சளி, தொண்டை வலி, உடல் வலி​யுடன் மக்​கள் அவதிப்​பட்டு வரும் நிலை​யில், இது கரோனா தொற்று பாதிப்​பாக இருக்​குமா என்ற அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது.
தமிழகத்​தில் சில வாரங்​களாக வெயி​லின் தாக்​கம் அதி​கரித்து வரு​கிறது. இதனால், உடலில் நீர்ச்​சத்து இழப்பு போன்ற பிரச்​சினை​களால் ஏராள ​மானோர் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர்.
பொது​மக்​களின் வசதிக்​காக, அரசுமருத்​து​வ​மனை​களில் ஓஆர்​எஸ் கரைசல் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதேநேரம், டைபாய்​டு, டெங்கு உள்​ளிட்ட பல்​வேறு காய்ச்​சல்​களால் பலர் பாதிக்​கப்​பட்டு அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.
காய்ச்​சலுக்கு சிகிச்சை பெறு​பவர்​கள் 3 அல்​லது 4 நாட்​களில் குணமடைந்து வந்த நிலை​யில், தற்​போதைய காய்ச்​சல்​ ஒரு​வாரத்​துக்கு மேல் ஆகி​யும் குணமடைய முடி​யாத நிலை உள்​ளது.
அது​வும் குறிப்​பாக, கரோனா தொற்​றுக்கு இருந்​ததை போல், காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் இரு​மல், தொண்டை வலி, சளி தொந்​தர​வு, இரு​மல், கடுமை​யான உடல்​வலி போன்​றவை​களால் அவதிப்​பட்டு வரு​கின்​றனர்.இதனால், மீண்​டும் கரோனா தொற்று பரவல் தொடங்​கி​யுள்​ளதா என்ற அச்​சம் பொது​மக்​களிடம் ஏற்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பொது சுகா​தா​ரத்​துறை அதி​காரி​களிடம் கேட்ட போது, “தமிழகத்​தில் டெங்கு உள்​ளிட்ட காய்ச்​சல்​களை கட்​டுப்​படுத்த தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.
அரசு மருத்​து​வ​மனை​களில் ஓஆர்​எஸ் கரைசல் இலவச​மாக வழங்​கப்​படு​கிறது. பொது​வாக காய்ச்​சல்​களுக்​கான அறிகுறிகள் ஒரே மாதிரி தான் இருக்​கும். கரோனா தொற்று காலத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை​கள் போல் தற்​போது செய்​வ​தில்​லை. தேவையனவர்​களுக்கு வேண்​டும் என்​றால் கரோனா பரிசோதனை மேற்​கொள்​ளு​மாறு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​றனர். அரசு மருத்​து​வர்​களிடம் கேட்டபோது, “காய்ச்​சலால் பா​திக்​கப்​பட்​ட​வர்​கள் கரோனா தொற்று பரிசோதனை செய்​யு​மாறு கேட்​டால்​, பரிசோதனை செய்யப்படும்” என்றனர்.