Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் தொழிலதிபர்கள் மாநாட்டில் உ.பி. முதல்வர் பங்கேற்பு

பெங்களூரில் தொழிலதிபர்கள் மாநாட்டில் உ.பி. முதல்வர் பங்கேற்பு

பெங்களூரு: ஜூன் 24- உத்தரபிரதேச மாநிலத்தை தொழிலதிபர்களின் சொர்க்க பூமியாக மாற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளார். இதன் முக்கிய கட்டமாக, பெங்களூருவில் இன்று (முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் இந்த பிரம்மாண்ட கூட்டத்திற்கு உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் தலைமை தாங்குகிறார். இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பலர் இதில் பங்கேற்கிறார்கள்.
உபி-யில் தொழில் தொடங்க உள்ள வசதிகள், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் அங்கு கொட்டிக்கிடக்கும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
உபி-யின் அசுர வளர்ச்சியை பெங்களூரு தொழிலதிபர்களுக்கு விளக்கமாக காட்ட ஒரு சிறப்பு குறும்படமும் திரையிடப்படுகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் உபி மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகள், மின்சார வாகன உற்பத்தி, ஒற்றைச் சாளர அனுமதி முறை மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் என தொழில் தொடங்க உகந்த மாநிலமாக மாறியுள்ளது. இதனால், பெங்களூருவில் உள்ள ஐடி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு உபி அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு நீட்டுகிறது.