காரில் அமர்ந்தபடி வெடிகுண்டு தயாரித்த உமர் நபி

புதுடெல்லி: நவம்பர் 20-
கடந்த 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே உள்ள ஒரு சிக்​னலில் கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அந்​தக் காரை ஓட்டி வந்த மருத்​து​வர் உமர் நபி​யும் உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) விசா​ரணை நடத்தி வரு​கிறது.
இந்​நிலை​யில், உமர் நபி உட்பட ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா மருத்​து​வக் கல்​லூரியைச் சேர்ந்த பல மருத்​து​வர்​கள் ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​பில் இருந்​ததும் பல இடங்​களில் தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​டிருந்​ததும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.
மருத்​து​வர்​கள் முஜம்​மில் ஷகீல், ஷாகின் உள்​ளிட்ட பலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.
இந்​நிலை​யில், குண்​டு​வெடிப்​புக்கு முன்பு அந்​தக் கார் எங்​கிருந்து வந்​தது என்​பது குறித்து சிசிடிவி காட்​சிகளின் மூலம் அதி​காரி​கள் கண்​டறிந்​தனர். டெல்​லி​யின் சுனேரி மசூதி அருகே 10-ம் தேதி மாலை 3.19 மணிக்கு அந்​தக் கார் வந்து நின்​றது அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி காட்​சி​யில் பதி​வாகி உள்​ளது. பின்​னர் அந்​தக் கார் 6.28 வரை (3 மணி நேரம்) அங்​கேயே நின்​றுள்​ளது. அதே​நேரம் அந்​தக் காரிலிருந்த உமர் நபி ஒரு முறை​கூட வெளி​யில் வரவில்​லை. அதன் பிறகு அங்​கிருந்து புறப்​பட்ட அந்​தக் கார் 6.52 மணிக்கு வெடித்​துச் சிதறி உள்​ளது.
வாகன நிறுத்​தத்​தில் காரில் இருந்​த​படியே (3 மணி நேரத்​தில்) உமர் நபி வெடிகுண்​டு​களை தயாரித்​துள்​ளார். பின்​னர் அங்​கிருந்து காரை எடுத்​துச் சென்ற அவர், போக்​கு​வரத்து நெரிசல் மிகுந்த ஒரு சிக்​னலில் வெடிகுண்டை வெடிக்​கச் செய்​துள்​ளார் என்​பது வி​சா​ரணை​யில்​ தெரிய​வந்​துள்​ளது.