கார்ட்டிங் பந்தயத்தில் அதிகா மிர் சாதனை

வலென்சியா, மார்ச் 3- சாம்பியன்ஸ் ஆஃப் தி ஃபியூச்​சர் அகாடமி சார்​பில் கார்​ட்டிங் பந்தய தொடர் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் ஸ்பெ​யினின் வலென்​சியா நகரில் நடை​பெற்ற முதல் தொடரில் இந்​தி​யாவை சேர்ந்த 11 வயதான வீராங்கனை​யான அதிகா மிர் 3-வது இடம் பிடித்து அசத்தினார். இதன் வாயி​லாக போட்டி நிறைந்த இந்​தத் தொடரில் பதக்க மேடை ஏறிய முதல் இந்​தி​யர் என்ற சாதனையை படைத்​தார் அதிகா மிர். 15 சுற்​றுகளை அதிகா மிர் 56.658 விநாடிகளில் எட்​டி​னார். ஆனால் பந்​த​யத்​தின் போது மற்றொரு வீராங்​க​னை​யுடன் மோதி​ய​தால் அதிகா மிர்ருக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டது. இதன் காரண​மாக அவர், 3-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்​.