சென்னை: செப். 26-
அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளதால் வெளியூர் செல்வதற்கான சுற்றுலா திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அதேபோல பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. ஆயுதபூஜை பண்டிகை வருகிற அக்டோபர் 1ம் தேதி வருகிறது.. இதையடுத்து, வரும் 27ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்படுகிறது.. இதன்காரணமாக ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.. காலாண்டு விடுமுறை இந்த பண்டிகைக்காலம் மற்றும் தொடர் விடுமுறையுடன் மாணவர்களின் காலாண்டு விடுமுறையும் சேர்ந்து கொள்கிறது.. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16ம் தேதி துவங்கி நடந்து இன்று 26ம் தேதியுடன் கடைசி தேர்வு முடிவடைகிறது. அதேபோல தீபாவளி பண்டிகைக்கு, சென்னையிலிருந்து அக்டோபர் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை 4,253 ஸ்பெஷல் பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும், 9,963 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 24,607 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேபோல, சென்னை கோவை இடையே சிறப்பு ரயில் வரும் ஞாயிறு முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமைகளில் இந்த ரயில் கோவையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கோவைக்கும் செல்கிறது. நாளை மறுநாள் அதாவது 28ம் தேதி முதல் அக்டோபர் 12ம் தேதி வரை இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுநாளை முதல் முதல் காலாண்டு விடுமுறை துவங்குகிறது.அரசு பள்ளிகளில் நாளை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளி மாணவர்களுக்கு நேற்றே காலாண்டு தேர்வு முடிவடைந்துவிட்டு, விடுமுறையும் துவங்கிவிட்டது.. வரும் அக்டோபர் 3ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுவதால், வெறும் 6 நாள் மட்டுமே விடுமுறை அவர்களுக்கு கிடைத்துள்ளது..

















