
பெங்களூரு: டிசம்பர் 19-
பெங்களூரில் நேற்று நள்ளிரவு, சிக்கஜாலாவின் சதஹள்ளியில் வேகமாக வந்த கார் கால்வாயில் கவிழ்ந்தது இதில் இருந்த 3
நண்பர்களில் 2 பேர் பலியானார்கள்
பில்லப்பா கார்டனைச் சேர்ந்த ஷாஹித் (22) மற்றும் ஜே.சி. நகரைச் சேர்ந்த சையத் அப்துல் ரஹ்மான் (24) ஆகியோர் இறந்தனர், காயமடைந்த சையத் முஜாஹிதீன் ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மூவரும் அதிகாலை 2 மணியளவில் ஹூண்டாய் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கால்வாயில் விழுந்து இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றொருவர் காயமடைந்தார்.
சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சம்பவ இடத்தை ஆய்வு செய்து, வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்




















