காஷ்மீர், கர்நாடகாவில் பயணம் செய்த அயத்துல்லா அலி காமேனி

ஸ்ரீநகர்: மார்ச் 2-
அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலில் உயி​ரிழந்த ஈரான் தலை​வர் காமேனி கடந்த 1980 மற்​றும் 1981-ம் ஆண்டுகளில் காஷ்மீர் மற்​றும் கர்​நாட​கா​வில் பயணம் செய்துள்ளார்.ஈரான் உச்ச தலை​வ​ராவதற்கு முன்பே அயத்​துல்லா அலிகாமேனி கடந்த 1980-ம் ஆண்டு காஷ்மீர் வந்​துள்​ளார். அப்​போது காஷ்மீரில் சன்னி மற்​றும் ஷியா முஸ்​லிம்​கள் இடையே பகைமை நிலவி வந்​தது. அப்​போது காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு வந்த அயத்துல்லா அலி காமேனி, சன்னி மசூ​தி​யில் நடை​பெற்ற வெள்ளிக் கிழமை தொழுகை​யில் பங்​கேற்று 15 நிமிடங்​கள் உரையாற்​றி​னார். சன்னி மற்​றும் ஷியா முஸ்​லிம்​கள் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார். அதன் ​பின்பே காஷ்மீரில் சன்னி மசூ​தி​யில் ஷியா பிரி​வினரும், ஷியா மசூ​தி​யில் சன்னி பிரி​வினரும் தொழுகை​யில் ஈடு​பட்​டனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கடந்த 1981ம் ஆண்டு காமேனி பெங்களூரு மற்​றும் அலிபூருக்கு வந்​தார். அலிப்​பூர் ஷியா முஸ்லிம்​கள் அதி​கம் வசிக்​கும் பகு​தி.அங்கு ஈரான் அரசு உதவியுடன் கட்​டப்​பட்ட மருத்​து​வ​மனையை​யும் காமேனி தொடங்கி வைத்​தார். அலிப்​பூர் முஸ்​லிம் இளைஞர்​கள் பலர், ஈரானில் தற்​போது மதக் கல்வி பயின்று வரு​கின்​றனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.இந்​திய பிரதம​ராக இருந்த மன்​மோகன் சிங், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரான் சென்​ற​போது, தனது இந்​திய பயணத்தை அவரிடம் அயத்​துல்லா அலி காமேனி நினைவு கூர்ந்தார். காமேனி, காந்​தி​யின் சுதந்​திர போராட்​டத்தை பாராட்டி​னார். அணி சேரா இயக்​கத்​தின் தலை​வ​ராக நேரு இருந்ததை​யும் அவர் பாராட்​டி​யுள்​ளார். ஈரானில் உள்ள சீக்​கியர்​கள் அளித்த புத்​தகங்​கள் மூலம் சீக்​கிய மதம் பற்றி அறிந்து கொண்​ட​தாக கூறிய காமேனி, பல மதத்தினர் வாழும் இந்​தி​யா​வில் ஒற்​றுமை நில​வுவதை​யும் பாராட்​டி​யுள்​ளார். ஈரான் தலை​வ​ராக அயத்​துல்லா அலி காமேனி பதவி​யேற்ற பின்பு அவர் இந்​தியா வரவில்​லை. ஆனால், பல கூட்டங்​களில் இந்​திய தலை​வர்​களை சந்​திக்​கும்​போது, தனது இந்திய பயணம் பற்​றி காமேனி நினைவு கூர்​ந்​தார்​.