Home விளையாட்டு கிரிக்கெட்: எஸ்எஸ்என் கல்லூரி சாம்பியன்

கிரிக்கெட்: எஸ்எஸ்என் கல்லூரி சாம்பியன்

சென்னை, மார்ச் 7- சென்​னையை அடுத்த கவரப்​பேட்​டை​யில் உள்ள ஆர்​எம்கே பொறி​யியல் கல்​லூரி​யில் மண்டல அளவி​லான பொறி​யியல் கல்​லூரி​களுக்கு இடையி​லான மஞ்​சுளா முனிரத்​தினம் நினைவு கோப்​பைக்​கான கிரிக்கெட் தொடர் நடை​பெற்​றது. 16 அணி​கள் கலந்​து​கொண்ட இந்த தொடரில் இறு​திப் போட்​டி​யில் நேற்று ஆர்​எம்கே – எஸ்​எஸ்​என் கல்​லூரி அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஆர்​எம்கே அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 130 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக முகிலன் 37 ரன்​கள் சேர்த்​தார். 131 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த எஸ்​எஸ்​என் கல்​லூரி 17 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 132 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. அதி​கபட்​ச​மாக வீரா 62, ஜித் 32 ரன்​கள் சேர்த்​தனர். 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற எஸ்​எஸ்​என் கல்​லூரி அணி சாம்​பியன் பட்​டம் வென்​றது. வெற்றி பெற்ற அணிக்கு ஆர்​எம்கே கல்விக்​குழு​மங்​களின் தலை​வர் ஆர்​.எஸ்​.​முனிரத்​தினம் கோப்​பையை வழங்​கி​னார். நிகழ்ச்​சி​யில் துணைத் தலை​வர் ஆர்​.எம்​.கிஷோர், இயக்​குநர் ஆர்​.ஜோதி நாயுடு, கல்​லூரி​யின் தலை​வர் கே.ஏ.முகமது ஜூனைத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.