Home செய்திகள் தேசிய செய்திகள் இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி

இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி

புதுடெல்லி: அக். 2-
ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான ஹாக்கி அரை இறு​தி​யில் நேற்று நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா, பாகிஸ்​தானுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 4-3 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது.
இந்​திய அணி தரப்​பில் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங் 5 மற்​றும் 13-வது நிமிடங்​களில் கிடைத்த பெனால்டி கார்​னர் வாய்ப்​பு​களை கோல்​களாக மாற்​றி​னார். தொடர்ந்து 23-வது நிமிடத்​தில் சுக்​ஜீத் சிங் அடித்த கோல் காரண​மாக இந்​திய அணி 3-0 என முன்​னிலை வகித்​தது.
ஆனால் பாகிஸ்​தான் அணி மீண்டு வந்து ஆட்​டத்தை 3-3 என சமநிலைக்கு கொண்டு வந்​தது. அந்த அணி தரப்​பில் 30-வது நிமிடத்​தில் அபு மஹ்மூத், 45-வது நிமிடத்​தில் ஹன்​னன் ஷாகித், 49-வது நிமிடத்​தில் வாஹீத் ராணா ஆகியோர் கோல் அடித்​தனர். இதனால் இந்​திய அணி அதிர்ச்​சி​யில் உறைந்​தது. போட்டி முடிவடைய 45 விநாடிகளே இருந்த நிலை​யில் இந்​திய அணி​யின் அபிஷேக் பீல்டு கோல் அடித்து அசத்​தி​னார். இதுவே வெற்றி கோலாக அமைந்​தது. இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் கால் பதித்​தது. நாளை நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி, மலேசி​யா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.