
புதுடெல்லி: அக். 31 –
இந்த தீபாவளி பண்டிகையின் போது பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தன. 91 சதவீதம் பேர் இந்த கார்டுக்கான கேஷ் பேக் ஆபர் களை மனதில் வைத்து இந்த தீபாவளிக்கு பொருட்களை வாங்க வேண்டும் என திட்ட மிட்டிருந்தனர்.
இதேபோன்று 48 சதவீதம் பேர் ஆன்லைன் மற்றும் ஆப் லைன் ஆகிய இரண்டின் வழி யாகவும் தீபாவளிக்கு தேவை யான பொருட்களை தேர்வு செய்தனர்.
இதுதொடர்பாக பைசாபஜார் நடத்திய ஆய்வில் தெரியவந் துள்ளதாவது: கிரெட்டிட் கார்டு மூலம் கடன் வாங்கி இந்த தீபாவளியை பலர் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். குறிப்பாக, 42 சதவீதம் பேர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது தங்களது ஷாப்பிங்கிற்காக ரூ.50,000-க் கும் மேல் செலவிட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது நுகர்வோரிடையே அதிக பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக உள்ளது. 22% பேர் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை செலவிட் டுள்ளனர், அதே நேரத்தில் 20% பேர் இந்த தீபாவளியின் போது ரூ.1 லட்சத்திற்கு மேல் தங்கள் கிரெடிட் கார்டுகளில் செலவிட்டுள்ளனர்.
2,300 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகபட்சமாக ஹோம் அப்ளையன்சஸை 25% பேரும், அதற்கு அடுத்த படியாக மொபைல் கேட்ஜெட்டு களை 23% பேரும், ஆடைகளை 22% பேரும் வாங்கியுள்ளனர். அதிக சலுகைகள் வழங்கப் படுவதன் காரணமாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவது கணக் கெடுப்பு மூலம் தெரியவந் துள்ளது. இவ்வாறு பைசாபஜார் தெரிவித்துள்ளது.
 
