
வதோதரா: மே 26-
பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.
குஜராத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.82,950 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக, அங்கு சென்றுள்ள அவர் வதோதராவில் ரோடு ஷோ நிகழ்த்தி வருகிறார். அப்போது, சாலையின் இருபக்கங்களிலும் பா.ஜ., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அப்போது, கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு, பிரதமர் மீது பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்றனர்.