Home செய்திகள் தேசிய செய்திகள் குஜராத்தில் ரூ.3,300 கோடியில் செமி கண்டக்டர் ஆலை

குஜராத்தில் ரூ.3,300 கோடியில் செமி கண்டக்டர் ஆலை

அகமதாபாத், ஏப்ரல் 1-
குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்​தில், கெய்ன்ஸ் செமி​கான் நிறு​வனத்​தின் ரூ.3,300 கோடி மதிப்​பிலான செமி கண்​டக்​டர் உற்​பத்தி ஆலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார்.
இந்​திய செமி கண்​டக்​டர் திட்​டத்​தின் (ஐஎஸ்​எம்) கீழ் அங்​கீகரிக்​கப்​பட்ட திட்​டங்​களில், மைக்​ரான் டெக்​னாலஜி நிறு​வனத்​துக்கு அடுத்​த​படி​யாக வணி​கரீ​தியி​லான உற்​பத்​தி​யைத் தொடங்​கும் 2-வது பெரிய ஆலை இது​வாகும். இது, இந்​தி​யா​வின் உற்​பத்​தித் திறனை வலுப்​படுத்​து​வதோடு, சிப் உற்​பத்​தி​யில் நமது நாட்டை உலகள​வில் முக்​கிய மைய​மாக மாற்​று​வதற்​கான இலக்கை அடைவதை துரித​மாக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலை​தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: கெய்ன்ஸ் செமி​கான் ஆலை திறப்​பு, தற்​சார்பு இந்​தியா நோக்​கிய நமது பயணத்தை மேலும் வலுப்​படுத்​தி​யுள்​ளது. இது நாட்​டில் வலு​வான செமி கண்​டக்​டர் உற்​பத்​திச் சூழலை உரு​வாக்​கு​வ​தில் ஒரு மைல்​கல்​லாகும். இந்த ஆலை​யில் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ளது. இது இந்​தி​யா​வின் செமி கண்​டக்​டர் கட்​டமைப்பு எந்த வேகத்​தில் வளர்ந்து வரு​கிறது என்​ப​தற்​கான சான்​றாக அமைந்​துள்​ளது. இவ்​வாறு பிரதமர் தெரி​வித்​துள்​ளார்.
குஜ​ராத்​தில் ஆலை​யைத் தொடங்கி வைத்த பிறகு, அங்கு பணி​யாற்​றும் பொறி​யாளர்​கள் மற்​றும் தொழில்​நுட்ப வல்​லுநர்​களு​டன் பிரதமர் கலந்​துரை​யாடி​னார்.
தின​மும் 63 லட்​சம் யூனிட்: இந்த ஆலை​யில் முதற்​கட்​ட​மாக மேம்​படுத்​தப்​பட்ட ‘இன்​டெலிஜென்ட் பவர் மாட்​யூல்’ (ஐபிஎம்) உற்​பத்தி செய்​யப்​பட​வுள்​ளது. இவை வாக​னங்​கள் மற்​றும் தொழில்​துறை பயன்​பாடு​களுக்​குத் தேவை​யான முக்​கிய​மான பாகங்​களாகும். ஒவ்​வொரு மாட்​யூலிலும் 17 சிப்​கள் இருக்​கும். இவை கலி​போர்​னி​யா​வைச் சேர்ந்த ஆல்பா மற்​றும் ஒமேகா செமி கண்​டக்​டர் நிறு​வனத்​துக்கு விநி​யோகிக்​கப்பட உள்​ளன. இந்த ஆலை​யின் அனைத்​துக் கட்​டப் பணி​களும் நிறைவடை​யும் போது, நாளொன்​றுக்கு 6.33 மில்​லியன், அதாவது சுமார் 63 லட்​சம் யூனிட்​களை உற்​பத்தி செய்​யும் திறன்​ கொண்​ட​தாக ​விளங்​கும்​.
ஜெயின் அருங்காட்சியகம்: ம​காவீர் ஜெயந்​தியை முன்​னிட்டு குஜ​ராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள கோபா தீர்த்​தத்​தில் சாம்​ராட் சம்​பிரதி அருங்​காட்​சி​யத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்​தார்.