Home செய்திகள் தேசிய செய்திகள் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: ஜூன் 13-
நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்​டூர் அணை திறக்​கப்​ப​டாத நிலை​யில், குறுவை சாகுபடியை ஊக்​குவிக்க ரூ.134.83 கோடி​யில் குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.
இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: தமிழகத்​தில் சராசரி​யாக 52.72 லட்​சம் ஏக்​கரில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது. இதில், காவிரி டெல்டா பகு​தி​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மாவட்​டங்​களின் அனைத்து பகு​தி​களி​லும், கடலூர், திருச்​சி, அரியலூர் மாவட்​டங்​களில் சில பகு​தி​களி​லும் நெற்​ப​யிரே முதன்​மை​யாக சாகுபடி செய்​யப்​படு​கிறது.
டெல்டா மாவட்​டங்​களில் ஆண்​டுக்கு 20.65 லட்​சம் ஏக்​கர் பரப்​பில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது.
இதில், குறு​வைப் பரு​வத்​தில் மட்​டும் சராசரி​யாக 5.14 லட்​சம் ஏக்​கரில் சாகுபடி நடை​பெறுகிறது. மேலும், டெல்டா அல்​லாத இதர மாவட்​டங்​களில், ஆண்​டுக்கு 32.07 லட்​சம் ஏக்​கரில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது.
இதில், கார், குறுவை, சொர்​ண​வாரி பரு​வத்​தில் மட்​டும் சராசரி​யாக5.48 லட்​சம் ஏக்​கர் பரப்​பில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது.
தஞ்​சாவூர், நாகப்​பட்​டினம், திரு​வாரூர், மயி​லாடு​துறை, கடலூர் திருச்​சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்​டங்​களில் குறுவை நெல் சாகுபடி செய்ய, மேட்​டூர் அணை​யில் ஆண்​டு​தோறும் ஜூன் 12-ம் தேதி தண்​ணீர் திறக்​கப்​படு​வது வழக்​கம். நடப்பு தென்​மேற்​குப் பரு​வத்​தில் ‘எல்​நினோ’ எனும் நிகழ்​வால் மழை அளவு 90 சதவீதத்​துக்​கும் குறை​வாக இருக்​கும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ளது.
தற்​போது, பரு​வ​மழை தாமத​மாகும் நிலை​யில் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து குறை​வாக உள்​ளது. இதனால் தற்​போது மேட்​டூர் அணையில் நீர்​மட்​டம் 79.56 அடி, நீர் இருப்பு 41.52 டிஎம்​சி​யாக மட்​டுமே உள்​ளது. எனவே, ஜூன் 12-ம் தேதி மேட்​டூர் அணையை திறப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறு இல்​லாத நிலை உள்​ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்​டங்​களில் இயல்​பாக நெல் சாகுபடி மேற்​கொள்​ளும் 5 லட்​சம் ஏக்​கரில் சாகுபடி செய்​வதற்​கான வாய்ப்பு மிக​வும் குறை​வாகவே உள்​ளது. எனவே, நெல் உற்​பத்​தியை அதி​கரித்​து, விவ​சா​யிகள் பயனடை​யும் வகை​யில், குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.