கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 30 ஆயிரம் கோடி அபராதம்

ஜெனிவா, செப்டம்பர் 6- கூகுள் நிறுவனம் ஆன்லைன் விளம்பரச் சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி போட்டி விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்திற்கு 2.95 பில்லியன் யூரோ (சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. ஆன்லைன் விளம்பரங்களை எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தொழில்நுட்பத்தில் , கூகுள் தனது சொந்த தயாரிப்புகளுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுவாக இன்றைக்கு ஆன்லை விளம்பரங்களை பொறுத்தவரை, கூகுள் தான் எந்த பொருளை மக்கள் வாங்க வேண்டும். எந்த பொருளை காட்ட வேண்டும் என்பதை முடிவு செய்கிறது. அதாவது கூகுளை பொறுத்தவரை விளம்பரம் கொடுத்தால் அந்த பொருளை மக்களுக்கு அதிகமாக காட்டுகிறது. அதேபோல் கூகுளில் விளம்பரம் செய்தால், அந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை தான் சர்ச்சில் முன்னிலையில் காட்டும். ஆனால் இது போட்டியாளர்களுக்கு இடையே வேற்றுமையை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனால் அந்த நாடுகளின் அரசுகள் கூகுளுக்கு அபராதம் விதிப்பது அவ்வப்போது நடக்கிறது. 30 ஆயிரம் கோடி அபராதம் ஏன் அந்த வகையில்,கூகுள் நிறுவனம் ஆன்லைன் விளம்பரச் சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி போட்டி விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்திற்கு 2.95 பில்லியன் யூரோ (சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதித்திருக்கிறது. ஐரோப்பிய ஆணையம் (European Commission) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், “ஆன்லைன் விளம்பரங்களை எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தொழில்நுட்பத்தில் (ad tech) கூகுள் தனது சொந்த தயாரிப்புகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதனால் அதன் போட்டி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன,. உலகம் முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள், கூகுளின் ஆன்லைன் தேடல் மற்றும் விளம்பரத்தில் ஆதிகக்கம் செலுத்துவதை மிகவும் கவனத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. ஆனால் இந்த முடிவு “தவறானது” என்றும், தாங்கள் மேல்முறையீடு செய்வோம் என்றும் கூகுள் நிறுவனம் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறது.