கேரளா ஐசியூவில் தாலி கட்டிய மணமகன்

திருவனந்தபுரம், நவ. 24- கேரளா மாநிலம் ஆலப்புழாவில் திருமணம் நடைபெற இருந்த நாளில் விபத்தில் சிக்கி ஐசியூவில் சிகிச்சை பெறும் மணப்பெண்ணுக்கு அதே நாளில் மருத்துவமனையில் வைத்து மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண்ணுக்கான மருத்துவ செலவுகள் முழுக்க தானே ஏற்பதாக ஒரு மருத்துவர் அறிவித்துள்ளதை பார்க்கும் இன்னும் மனிதம் சாகவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆலப்புழா, தும்போளியைச் சேர்ந்தவர் மனுமோன்- ரஷ்மி தம்பதியின் மகன் ஷரோன்.
சேர்த்தலா பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார் ஷாரோன். இவருக்கும் கொம்மாடி முத்தலச்சேரியைச் சேர்ந்த ஜெகதீஷ்- ஜோதி தம்பதியின் மகள் ஆவணிக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. ஆவணி, சேர்த்தலாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது திருமணம் 21 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆலப்புழாவில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் 12.15 மணி முதல் 12.30 மணிக்குள் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண நாளின் போது மணப்பெண்ணுக்கு மேக்கப் போட உறவினர்கள் காரில் சென்றனர்.
குமரகம் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் சென்று மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் காயமடைந்தனர். மணப்பெண் ஆவணிக்கு கை உடைந்து முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.