Home செய்திகள் தேசிய செய்திகள் கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி

கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி

திருவனந்தபுரம், ஜூன் 4- கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி என்றும், கடன் அல்லாத நிலுவை பொறுப்புகள் ரூ.48,733 கோடி என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. முதல்வராக வி.டி. சதீசன் பொறுப்பேற்றார். முதல்வரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார். அதன்படி, நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கேரள சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள்: கேரள மாநிலத்தின் மொத்த பொதுக்கடன் ரூ.5.07 லட்சம் கோடி. மாநிலத்தின் வருவாயில் 77% சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கே செலவிடப்படுகிறது. இதனால், வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி மிகவும் குறைந்துவிட்டது. மாநிலம் மிக அதிக அளவிலான நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது.