Home மாவட்டங்கள் பெங்களூர் சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு

சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு

சென்னை: ஜூலை 27-
தமிழகத்​தில் உள்ள தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் சுங்கச்சாவடிகளில் மாதாந்​திர பாஸ் கட்​ட​ணம் ஏப்​ரல் முதல் 3-வது முறை​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.
தமிழகத்​தில் உள்ள தேசிய நெடுஞ்​சாலைகளில் 77 இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் உள்​ளன. சுங்​கச்​சாவடிகளில் ஒவ்​வோர் ஆண்​டும், 5 சதவீதம் கட்​ட​ணத்தை உயர்த்​திக்​கொள்ள, தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது.
ஆண்​டு​ தோறும் ஏப்​.1-ம் தேதி கட்​ட​ணம் மாற்​றப்​படு​கின்​றது. இந்​நிலை​யில் சுங்​கச்​சாவடிகளுக்கு அருகே 20 கி.மீ. சுற்​றள​வில் வசிப்​பவர்​களுக்​கான மாதாந்​திர சுங்​கச்​சாவடி பாஸுக்​கான கட்​ட​ணத்தை இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் 3-வது முறை​யாக உயர்த்​தி​யுள்​ளது. மொத்​தத்​தில் ஏப்​ரல் 1-ம் தேதி​முதல் மாதாந்​திர பாஸ் கட்​ட​ணம் ரூ.30 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது.