Home தலைப்பு செய்தி 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்

10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்

புதுடெல்லி: ஜூலை 27-
பாராளுமன்றத்தில் இன்று
பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா, 2026 தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி வினாத்தாள் கசிய விடும் தனிநபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
வினாத்தாள் கசிவு முறைகேடு செய்யும் குழுக்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். தவறிழைக்கும் தேர்வு முகமைகளுக்கு ரூ.5 கோடி அபராதம் மற்றும் 8 ஆண்டுகள் வரை தேர்வு நடத்தத் தடை விதிக்கப்படும். வழக்கின் விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க சிறப்புப் பணிப்படை அமைக்கப்படும். மேலும் 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் நியமிக்கப்படும்.
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
நீட் வினாத்தாள் கசிவு காரணமாக நாட்டில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று சிஜேபி என்கின்ற கரப்பான் பூச்சி கட்சி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தியது லட்சக்கணக்கான மாணவர்கள் இளைஞர்கள் குவிந்தனர். அவர்கள் மீது தடியடியை நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது வினாத்தாள் கசிவு முறைகேடு செய்யும் நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் அதற்காக சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்து இருந்தார் அதன்படி இன்று பாராளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
வினாத்தாள் கசிவு முறைகேடுகளை விசாரிக்க இதற்காகப் பிரத்யேக சிறப்புப் புலனாய்வுப் படையும் அமைக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இடைத்தரகர்களை ஒடுக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவில் இருந்து, தேர்வு எழுதும் சாதாரண மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும்; தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடை காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட சரத்துகள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஈடுபட்டன. அமளிக்கு இடையே இந்த மசோத தாக்கல் செய்யப்பட்டுள்ளது.