
திருவனந்தபுரம், டிச. 2- கேரளாவில் மசாலா பத்திரம் வழக்கு தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயன்,
முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், முதல்வரின் முதன்மை தலைமை செயலர் ஆபிரகாம் ஆகியோருக்கு, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,
கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப நிதி திரட்டும் முயற்சியில் மாநில அரசு இறங்கியது.
இதற்காக, கே.ஐ.ஐ.எப்.பி., எனப்படும் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் மூலம், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட மசாலா பத்திரங்கள் வெளியிடப்பட்டன. அந்த வகையில், லண்டன் மற்றும் சிங்கப்பூர் பங்கு சந்தைகளில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு, இந்திய மதிப்பில் 2,672.80 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
















