பாட்னா: நவம்பர் 14-
பீகார் மாநிலத்தின் 243 தொகுதிகளுக்கும் நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடந்த 2020 தேர்தலை காட்டிலும் இந்த ஆண்டு தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தனர். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தேஜஸ்வி யாதவ் எதிர்பார்த்திருந்தார். ஆனால் களம் மாறியிருக்கிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 132 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 66 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.
அதேபோல மின்னணு வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் என்டிஏ கூட்டணி 160 இடங்களிலும், மாகபந்தன் கூட்டணி 78 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பாஜக-71 ஐக்கிய ஜனதா தளம்-70 ராம் விலாஸ் பஸ்வானின் LJPRV கட்சி – 15 இந்துஸ்தான் அவாம் மோர்சா – 4 ராஷ்டிரிய லோக் மோர்சா – 1 மகாபந்தன் கூட்டணியை பொறுத்தவரை,
ஆர்ஜேடி – 41 காங்கிரஸ் 9 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல் 4 சிபிஎம் 1 சிபிஐ 1 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 122 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை அமைக்கலாம். கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை அதிக அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். வழக்கமாக வாக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும் என்கிற கணிப்பு இருக்கிறது. எனவே தேஜஸ்வி யாதவ் குஷியாக இருக்கிறார்.















