
தர்மபுரி: பிப்ரவரி 18-
கோடைக்கு முன்பே வறண்டு போன ஒகேனக்கல்லால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அடியோடு சரிந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல் வறண்டு காணப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், காவிரி ஆற்றில் நீர் வரத்து இருந்து வந்தது. ஆனால், தற்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வழியாக வருகிறது. பருவமழை காலத்தின் போதும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போதும் அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வரும்.
அப்போது ஒகேனக்கல் களை கட்டும்.. காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதை காண தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். Also Read 4 lane highway: தூத்துக்குடி டூ குமரி இனி பறக்கலாம்.. திருச்செந்தூர் வழியாக புதிய 4 வழிச்சாலை.. வேற லெவலில் மாறப்போகுது மேலும் இங்குள்ள தொங்கு பாலம், நடைபாதை, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிப்பர். இங்கு பரிசல் வசதியும் உண்டு என்பதால் குடும்பங்களோடு, நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் சென்று மகிழ்வார்கள். சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகம் வருவாதால் அங்கு சிற்றுண்டி கடை வியாபாரிகளுக்கும் வியாபாரம் களை கட்டும்.
இந்த நிலையில் பருவமழை குறைந்ததும், நீர் வரத்து இல்லாததாலும் ஆர்ப்பரித்து காணப்பட்டு வந்த ஒகேனக்கல் தற்போது களையிழந்து வறண்டு காணப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதி வறண்டு காணப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், காவிரி ஆற்றில் நீர் வரத்து இருந்து வந்தது. ஆனால், தற்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீரின்றி வறண்டு காணப்படுகிறது. காவிரி ஆற்றில் சிறு ஓடை போல் தண்ணீர் செல்கிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.பார்க்கும் இடமெல்லம் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது. கோடை விடுமுறைக்கு முன்பாகவே தற்போதே பாறை திட்டுக்களாக காட்சியளிப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.













