
சென்னை: பிப்ரவரி 23-
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் புதிய வரவாக அரசியல் கட்சி ஒன்று நாளை உருவாக இருக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நிழலாக கருதப்பட்ட சசிகலா, நாளை ‘அம்மா அதிமுக’ என்ற கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுகிறார்.
கட்சி தொடங்கியதும் தேர்தல் ஆணைய பதிவு பணிகள் தொடங்கும் எனவும், அது நடக்காவிட்டாலும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது தான் சசிகலாவின் எண்ணம் என்கின்றனர். மேலும் எடப்பாடிக்கும் டிடிவி தினகரன் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் தனது ஆதரவாளர்களை தளத்தில் இறக்கப் போகிறார் சசிகலா என்கின்றனர்.தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களில் இருக்கிறது. மார்ச் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. இதை ஒட்டி முன்னதாகவே அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன
திமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் மேலும் சில அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு வந்திருப்பதால் தொகுதி பங்கிட்டை மிக தீவிரமாக கையாண்டு வருகிறது திமுக தலைமை.
மக்கள் நீதி மய்யம், தேமுதிக கூட்டணிக்கு வந்திருக்கும் நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் வரலாம் என சொல்லப்படுகிறது. இதனால் திமுகவுக்கு கூடுதல் நெருக்கடி உருவாகியுள்ளது. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்
செல்ல முடியாமல் திணறி வருகிறது. அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. ஜான்பாண்டியன் தமமுக, பாரிவேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் இருக்கிறது.
அம்மா அதிமுக தொடக்கம் அந்த விழாவில் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க அந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அம்மா அதிமுக என்ற புதிய கட்சியின் அறிவிப்பை சசிகலா வெளியிடுவார் என்கின்றனர்.
கட்சியின் பெயரை அறிவித்ததும் தேர்தல் ஆணைய பதிவுக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் தாமதமாகத்தான் கிடைக்கும் என்பது சசிகலாவுக்கு தெரியும். அதனால் பிரமாண்டமாக கட்சி தொடக்க விழாவை மதுரையில் நடத்தி விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார் என்கின்றனர்.















