சசி தரூர் வலியுறுத்தல்

திருவனந்தபுரம், டிச. 26-அனைத்து சமூகங்களின் கலாசாரம் மற்றும் மத மரபுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். இது அரசியலுக்கு அடிப்படையானது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தாக்கப்படும்போது, ​​ஒவ்வொரு இந்தியரும் தாக்கப்படுகிறார். அனைத்து சமூகங்களின் கலாசாரம் மற்றும் மத மரபுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.
இது அரசியலுக்கு அடிப்படையானது. ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) வணிக வளாகத்தில் சாண்டா கிளாஸ் உருவ பொம்மை சேதப்படுத்தப்பட்டது, ஜபல்பூரில் ஒரு பார்வையற்ற கிறிஸ்தவப் பெண் தாக்கப்பட்டார். பிற மாநிலங்களிலிருந்து வரும் செய்திகள் கேரளாவில் பதட்டத்தை அதிகரித்தன. ஒருவரின் நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான அரசியலமைப்பு உரிமை ஏன் இவ்வளவு வெளிப்படையாக சவால் செய்யப்படுகிறது. குடிமக்களைப் பாதுகாப்பது சலுகை அல்ல. அது அரசின் கடமை. அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.