சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை.. டெல்லி பாஜக அதிரடி முடிவு

டெல்லி, செப்டம்பர் 4- 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.
மறுபக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனித்து போட்டியிட நினைத்த நிலையில், கட்சி தலைமை வேறு முடிவை எடுத்தது. அண்ணாமலைக்கு தேசியளவு முக்கிய பதவி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் அண்ணாமலை கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டார்.
இரண்டு தேர்தல்களிலும் அவர் தோல்வியடைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் கரூர் மாவட்டத்தில் போட்டியிடுவாரா அல்லது கோவை மாவட்டத்தில் போட்டியிடுவாரா என்று விவாதம் நடைபெற்று வருகிறது.