Home விளையாட்டு சிஎஸ்கே – இன்று சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் உடன் மோதல்

சிஎஸ்கே – இன்று சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் உடன் மோதல்

சென்னை, மே 18- ஐபிஎல் தொடரில் இன்று நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் சென்னை சூப்​பர் கிங்​ஸ் (சிஎஸ்கே), சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதவுள்​ளன. சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்​டம் நடைபெறவுள்​ளது. சிஎஸ்கே அணி இது​வரை 12 போட்​டிகளில் விளை​யாடி தலா 6 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. அடுத்த 2 போட்​டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்​றால் மட்​டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்​பில் நீடிக்க முடி​யும். எனவே,
அடுத்த 2 போட்​டிகளுமே சிஎஸ்கே அணிக்கு வாழ்வா சாவா போட்​டிகளாக அமைந்​துள்​ளன. எனவே, இந்த லீக் போட்​டி​யில் வெற்றி பெறு​வதற்கு சிஎஸ்கே அணி வீரர்​கள் பெரு முயற்சி செய்வர் என்​ப​தில் சந்​தேகமில்​லை. கடந்த லீக் ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி, லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் தோல்வி கண்​டது. அதற்கு முந்​தைய 3 ஆட்​டங்​களி​லும் சிஎஸ்கே அணி வீரர்​கள் சிறப்​பாக செயல்​பட்டு வெற்றி கண்​டிருந்​தனர். ஆனால் லக்னோ உடனான போட்​டி​யில் சிஎஸ்கே வீரர்​களின் பந்​துவீச்சு சுத்​த​மாக எடு​பட​வில்​லை.
மேலும் பேட்​டிங்​கின்​போது முன்​வரிசை வீரர்​கள் யாருமே தங்​களது உயர்மட்​டத் திறனை வெளிப்​படுத்​த​வில்​லை. சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட், உர்​வில் பட்​டேல் ஆகியோர் குறைந்த ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.
எனவே, இன்​றைய போட்டியில் இவர்​கள் மட்​டையை சுழற்​றும்​போது அது அணிக்கு வெற்​றி​வாய்ப்​பைத் தேடித் தரும். அது​போலவே கார்த்​திக் சர்​மா, டெவால்ட் பிரே​விஸ், ஷிவம் துபே, பிர​சாந்த் வீர் ஆகியோர் எதிரணி வீரர்​களுக்கு அழுத்​தம் கொடுப்​பர் என எதிர்பார்க்கலாம்.