Home செய்திகள் தேசிய செய்திகள் உ.பி.யில் கோர விபத்து: 9 பேர் பலி

உ.பி.யில் கோர விபத்து: 9 பேர் பலி

லக்னோ: மே 18 –
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 730-ல் இன்று காலை நடந்த கோரமான சாலை விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். விபத்தின் தீவிரம் எந்த அளவிற்கு இருந்தது என்றால், மேஜிக் வேனில் இருந்த ஒன்பது பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் இருவர் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இசநகர் காவல் நிலையப் பகுதியிலுள்ள சிசையா உஞ்ச்காவ்ன் அருகே, பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் ஒரு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது மீட்பு படையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரி நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் சமீப நாட்களாக இயற்கை பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது புழுதி புயல் கனமழை இடி மின்னல் காரணமாக நூற்றுக்கணக்கான பேர் பலியாகி உள்ளனர் எந்த நிலையில் இன்று காலை நடந்த கோரமான விபத்தில் ஒன்பது பேர் வரை பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.