சிஐஎஸ்எப் முக்கிய பணிகளில் முதல் பெண் கமாண்டோ குழு

புதுடெல்லி: ஆக. 26-
மத்திய தொழிலக பாதுகாப்பு படை​யில் (சிஐஎஸ்எப்) முதல் முறை​யாக பெண் கமாண்​டோ குழு​வினரை முக்​கிய பணிகளில் ஈடு​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. கடுமை​யான பயிற்​சிகளுக்​குப் பிறகு விமான நிலை​யங்​கள் மற்​றும் பிரச்​சினை​கள் அதி​கம் மிகுந்த பகு​தி​களில் பெண் கமாண்​டோ குழு​வினர் பணி​யமர்த்​தப்பட வாய்ப்​புள்​ளது.
இதற்​காக 100 பெண் சிஐஎஸ்​எப் வீரர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆயுதப் பயிற்​சி, தீயணைப்பு பயிற்​சி, ஓட்​டம், காடு​களில் உயிர் வாழும் பயிற்​சி, நெருக்​கடி​யான தருணங்​களில் சாமர்த்​தி​ய​மாக முடி​வெடுப்​பது, குழுப் பணியை சோ​திக்க வடிவ​மைக்​கப்​பட்ட 48 மணிநேர நம்​பிக்​கையை வளர்க்​கும் பயிற்சி போன்ற செயல்​பாட்டு திறன்​கள் அவர்​களுக்கு வழங்​கப்​படும்.
மத்​திய பிரதேசத்​தின் பர்​வாஹா​வில் உள்ள பிராந்​திய பயிற்சி மையத்​தில் (ஆர்​டிசி) பெண் கமாண்​டோக்​களுக்​கான இந்தப் பயிற்​சிகள் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்​ளன. உயர் பாது​காப்பு நிறு​வனங்​கள் மற்​றும் ஆலைகளில் விரைவு எதிர்​வினை குழுக்​கள் (கியூஆர்​டி) மற்​றும் சிறப்பு பணிக்கு குழு (எஸ்​டிஎப்) ஆகிய​வற்​றில் பணி​யாற்​றும் வகை​யில் பெண் கமாண்​டோ குழுக்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்டு தயார்​படுத்​தப்பட உள்​ளன.
பல்​வேறு விமான நிலை​யங்​களில் தற்​போது பணிமயர்த்​தப்​பட்​டுள்ள 30 பெண்​களைக் கொண்ட முதல் குழு ஆகஸ்ட் 11 முதல் அக்​டோபர் 2025 வரை பயிற்சி பெறும். அதைத் தொடர்ந்து இரண்​டாவது பெண் கமாண்​டோ குழு அக்​டோபர் 6 முதல் நவம்​பர் 29 2025 வரை பயிற்​சி​யில் இருக்​கும். குறைந்​தது 100 பெண் கமாண்​டோக்​களுக்கு இது​போன்று பயிற்​சிகள் அளிக்​கப்​படும்.
இதுகுறித்து சிஐஎஸ்​எப் செய்​தித் தொடர்​பாளர் கூறுகை​யில், “சிஐஎஸ்​எப் முக்​கிய பணி​களில் பெண்​களைச் சேர்ப்​பது பாலின சமத்​து​வத்தை நோக்​கிய முதல்​படி​யாக அமை​யும். மேலும், சிஐஎஸ்​எப் படை​யில் பெண்​களின் பங்​களிப்பை 10 சதவீத​மாக உயர்த்த வேண்​டும் என்ற அரசின் இலக்கை வேக​மாக அடைய இது உதவும்​’’ என்​றார்.