
சிகாகோ: ஆகஸ்ட் 25- வாஷிங்டனை தொடர்ந்து, சிகாகோவிலும் நகரின் பாதுகாப்புக்கு ராணுவத்தை களமிறக்கும் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வந்துள்ளார்.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், சிறப்பு மாவட்டமாக உள்ளது. இதன் பாதுகாப்பு மேயரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீசாரால் நிர்வகிக் கப்படுகிறது.இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் வாஷிங்டனின் பாதுகாப்பை டிரம்ப் தன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். நகரில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காரணம் கூறி ராணுவத்தினரை குவித்தார். இதே போல் கலிபோர்னி யாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடந்த ஜூனில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் நட வடிக்கையில் குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரா க கூட்டத்தினர் தாக்குதல் நடத்தினர் . இதையடு த்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு 4,000 ராணுவத்தினர், 700 கடற்படையினரை அனுப்பினார்.
தற்போது அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரம், ‘குற்றங்களால் குழப்பத்தில் உள்ளது, அதை சரி செய்வோம்’ என அதிபர் டிரம்ப் நேற்று முன் தினம் கூறினார்.இதனால் ராணுவ தலைமையகமான பென்ட கன் சிகாகோவுக்கு ராணுவத்தை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.