சிங்கப்பூர், அக். 4- சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த இரண்டு தமிழர்கள், பாலியல் தொழிலாளர்கள் இருவரை தாக்கி, கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குற்றத்திற்காக இருவருக்கும் 5 ஆண்டுகள் ஒரு மாத சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. தாமரை பக்கம் நகரும் தவெக.. அரசியல்வாதி போர்வையில் சினிமாக்காரர்.. திமுகவால் சமாளிக்க முடியல: பிரபலம் அமெரிக்காவை கதறவிட்ட சீனா.. ஜி ஜின்பிங்கை 4 வாரங்களில் சந்திப்பேன்.. அலறியடித்து ஓடும் டிரம்ப்.. பின்னணி கோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவல்! விஜய் பாதுகாவலர்களிடம் விளக்கம் கேட்ட உள்துறை அமைச்சகம் அரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகியோர் கடந்த ஏப்ரல் 24 அன்று சிங்கப்பூருக்கு வந்திருக்கின்றனர். சிங்கப்பூர் வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு லிட்டில் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது, ஒரு அந்நியர் இவர்களை அணுகி பாலியல் சேவைக்கு விருப்பமா என்று கேட்டிருக்கிறார். இவர்களும் ஓகே சொல்ல, அந்த நபர் இரண்டு பெண்களின் தொடர்பு விவரங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.


















