சிறுமி பாலியல் வழக்கு – தஷ்வந்தை விடுதலை செய்ய உத்தரவு

டெல்லி:அக்டோபர் .8-
சென்னை 6 வயது சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் அம்மாவை கொலை செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமி பாலியல் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொங்கு டூ தென் மண்டலம்.. வருகிறது பிரம்மாண்ட 4 வழிச்சாலை.. 95% பணிகள் ஓவர்.. எப்போது திறக்கப்படும்? இனாம் நிலங்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பு.. திருப்பூரில் ஒரே கிராமத்தில் 650 ஏக்கர் நிலம் பாதிப்பு கட்டி கட்டியாய் தங்க பிஸ்கட்! கிலோ கிலோவாய் உருகிய தங்கம்! பஸ்ஸில் ரூ.10 கோடி நகையால் திகைத்த மக்கள் சென்னை போரூர் அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் சிறுமி வீட்டின் அருகே வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ஜாமீனில் வெளியில் வந்த தஷ்வந்த், அதே வருடம் தன் அம்மாவையும் கொலை செய்தார்.
சிறுமி பாலியல் வழக்கு, கொலை வழக்கு ஆகியவற்றில் தஷ்வநதுக்கு 46 வருடம் சிறை மற்றும் தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அதில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்து. அம்மா கொலை வழக்கில், அவரின் அப்பா பிறழ் சாட்சியாக மாறினார். இதனால் தன் அம்மா கொலை வழக்கில் தஷ்வந்த் ஏற்கனவே விடுக்கப்பட்டார். ஆனாலும் சிறுமி பாலியல் வழக்கில் தஷ்வந்த் சிறையில் இருந்து வருகிறார். தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறுமி வழக்கில் குற்றத்தை உறுதி செய்ய தவறிவிட்டதாக கூறி தஷ்வந்தை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. வீடியோ சிசிடிவி போதுமானளவுக்கு இல்லை.ஆதாரத்தை திரட்டும் அஸ்ரா கார்க்.. விஜய்க்கு சிக்கல் மேல் சிக்கல்.. இதை யோசித்து இருக்கவே மாட்டார் நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு பிரதர் ஸ்டாலினை பிரிய முடியாது! TVKவை காங்கிரசில் இணைத்திடுங்கள்! விஜய்க்கு ராகுல் காந்தி நெருக்கடி? தஷ்வந்த் டிஎன்ஏ ஒத்துப்போகவில்லை. இப்படி போதுமான ஆதாரம் இல்லை. எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் தஷ்வந்த் விரைவில் விடுதலையாகவுள்ளார். இந்த உத்தரவு பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

s