
சிலி: ஜூன் 6-
2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்றி ஒவ்வொரு பிராந்தியம் உள்ள நாடுகள் தனியாக ஒரு தொடரில் மோதும். அந்த வகையில் தென் அமெரிக்கா நாடுகள் அடங்கிய தகுதிச்சுற்றுப் போட்டிகள் CONMELBOL என்று அழைக்கப்படும். இந்தப் பிராந்தியத்திலிருந்து நேரடியாக ஆறு அணிகள் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியன் ஆன அர்ஜென்டினாவும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சூழலில் சிலியில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி சிலி அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டிக்கு அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி திரும்பியதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மெஸ்ஸி போட்டியின் முதல் பகுதி முழுவதும் களத்திற்குள் வரவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தனர்.சிலி அணி வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தும், அர்ஜென்டினா வழக்கம் போல் தங்களுடைய தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.