சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை

சென்னை: செப்.27-
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், பட்டம், பட்டயம் மற்றும் Non-Technical Stream பெற்றவர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். . போக்குவரத்து கழகங்களில் நடத்துனர், டிரைவர் என சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (சென்னை), விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.
இவற்றின் கீழ் மொத்தம் 25 மண்டல வாரியாக 20 ஆயிரத்திற்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், சென்னை நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், பட்டம், பட்டயம் மற்றும் Non-Technical Stream பெற்றவர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சி பெற (https://nats.education.gov.in) அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், பட்டம், பட்டயம் மற்றும் Non -Technical Stream பெற்றவர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான பொறியியல் பட்டம் (B.E.), பட்டயம் (Diploma) மற்றும் Non -Technical Stream (Under Graduate UG) 4 (Mechanical Engineering / Automobile Engineering, Civil Engineering, Electrical and Electronics Engineering & B.A., B.sc., B.com, BBA, BBM, BCM etc.,) 2021, 2022, 2023, 2024 & 2025-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக ஆன்லைனில் மாணவர்களிடமிருந்து (https://nats.education.gov.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.