செப்.3ல் தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

டெல்லி: ஆக. 13-
செப்டம்பர் 3ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாடு வரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார். நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா செப்.3ஆம் தேதி நடக்கவுள்ளது. Also Read “AC buses: திரும்பிய வசந்தம்! சென்னையில் களமிறக்கப்பட்ட ரெட் டிராகன்.. இனி சாலைகளை அலங்கரிக்கும் ஏசி பஸ் “ இந்த விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.