
புதுடெல்லி: டிசம்பர் 2-
சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக சஞ்சார் சாத்தி செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு மட்டும் 120 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில், சைபர் பாதுகாப்புக்காக மத்திய அரசு பிரத்தேயகமாக உருவாக்கியுள்ள சஞ்சார் சாத்தி செயலியை புதிய போன்களில் நிறுவிய பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதனை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















