ஜனவரி 1ம் தேதி.. 8வது ஊதியக்குழு தொடங்குகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

டெல்லி, டிச. 25- மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதியோடு 7வது ஊதியக்குழு முடிவிவிற்கு வருகிறது. இதனால் 8வது ஊதியக்குழு ஜனவரி 1 தொடங்க வேண்டும். ஆனால் உண்மையில் ஊதியக்குழு தொடங்க இன்னும் 1-2 வருடங்கள் ஆகும். இதனால் அதுவரை 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும். 8வது ஊதியக்குழுவின் கீழ் யார் தகுதியானவர்கள், யார் இல்லை, திருத்தப்பட்ட ஊதியம் எப்போது வரும், எதிர்பார்க்கப்படும் உயர்வு எவ்வளவு என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 8வது ஊதியக் குழு சம்பளம் வழங்க போகிறது எனினும், யார் பலன் பெறுவார்கள், எவ்வளவு உயர்வு, சம்பள மாற்றங்கள் எப்போது போன்ற பல குழப்பங்கள் இன்னும் நிலவுகின்றன. இக்கட்டுரை அந்த சந்தேகங்களைத் தீர்க்கும். 8வது ஊதியக் குழு 8வது ஊதியக் குழுவின் கீழ் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மத்திய சிவில் சேவைகளின் ஊதியக் கட்டமைப்பில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். பணியாற்றுபவர்கள், ஓய்வுபெற்றவர்கள் என இரு தரப்பினருமே இக்குழுவின் வரம்பிற்குள் வருகின்றனர். மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), தன்னாட்சி அமைப்புகள் மற்றும் சட்டமுறை நிறுவன ஊழியர்கள் தானாகவே இக்குழுவின் கீழ் வரமாட்டார்கள். சம்பந்தப்பட்ட மாநில மற்றும் நிர்வாக அமைப்புகள், இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்க முடிவு செய்தால் மட்டுமே பலன் பெறுவர். 18 மாதங்களுக்குள் அறிக்கை 8வது ஊதியக் குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டு விட்டது அரசு அதற்கு 18 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் அளித்தது. நாடாளுமன்றத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டு, பரிந்துரைகள் ஏற்கப்பட்டதும் போதுமான நிதி ஒதுக்கீட்டையும் நிதி அமைச்சகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு இதுவரை இடைக்கால நிவாரணம் அல்லது அகவிலைப்படி/அகவிலை நிவாரணத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஊதியம் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், முந்தைய ஊதியக் குழுக்களின் வரலாறு கால தாமதத்தைக் காட்டுகிறது. பரிந்துரைகள், அமைச்சரவை ஒப்புதல் பெற்று, பல மாதங்களுக்குப் பிறகே நிலுவைத் தொகையுடன் சம்பளம் வங்கிக் கணக்குகளுக்கு வரும்.