ஜாதி கூட்டங்களுக்கு தடை

புதுடெல்லி: செப்.23-
உத்தர பிரதேச மாநிலம் எட்​டா​வா​வில் மது​பானக் கடத்​தல் தொடர்​பான குற்​ற​வியல் நடவடிக்​கைகளை ரத்து செய்ய கோரி பிர​வீன் சேத்ரி என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். அதில், “ஜா​தியை கொண்​டாடு​வது தேச விரோத​மானது.
அரசி​யலமைப்பை மதிப்​பது தேசபக்​தி​யின் மிக உயர்ந்த வெளிப்​பாடு” என்று கூறி​யிருந்​தார். அந்த மனுவை உயர் நீதி​மன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்​ளு​படி செய்​தார். எனினும், அவர் வெளி​யிட்ட உத்​தர​வில், “சமூகத்​தில் ஜாதி​யைப் பெரு​மைப்​படுத்​து​வதை நிறுத்த வேண்​டும்.உ.பி.​யின் அரசு ஆவணங்​கள், வாக​னங்​கள் மற்​றும் பொது இடங்​களில் இருந்து ஜாதி பெயர்​கள், சின்​னங்​களை அகற்ற வேண்​டும். வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த நாடாக இந்​தியா மாற வேண்​டுமென்​றால், ஜாதி அமைப்பு ஒழிக்​கப்பட வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.அதன்​படி, உ.பி. அரசு ஜாதி அடிப்​படையி​லான பொதுக் கூட்​டங்​கள், பேரணி​கள் மற்​றும் நிகழ்ச்​சிகளைத் தடை செய்​துள்​ளது. இதுகுறித்து உ.பி. தலைமை செயலர் தீபக் குமார் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சமூக ஊடகங்​கள் மற்​றும் இணை​யத்​தில் ஜாதியை கொண்​டாடு​வது அல்​லது வெறுப்பை பரப்​பும் உள்​ளடக்​கத்​துக்கு எதி​ராக ஐடி சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​படும்.