ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

சென்னை, நவ. 28- சர்வதேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் இன்று (நவ.28) முதல் வரும் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன.
ஒவ்​வொரு பிரி​விலும் நான்கு அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.
நடப்பு சாம்​பிய​னான ஜெர்​மனி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரிவில் தென் ஆப்​பிரிக்​கா, கனடா, அயர்​லாந்து அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.போட்​டியை நடத்​தும் இந்​தியா ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் ஓமன், சிலி, சுவிட்​சர்​லாந்து ஆகிய அணி​களும் உள்​ளன.
‘சி’ பிரி​வில் 2021-ம் ஆண்டு சாம்​பிய​னான அர்​ஜெண்​டி​னா, நியூஸிலாந்​து, ஜப்​பான், சீனா ஆகிய அணி​கள் இடம் பிடித்துள்ளன.
‘டி’ பிரி​வில் ஸ்பெ​யின், பெல்​ஜி​யம், எகிப்​து, நமீபியா ஆகிய அணி​களும், ‘இ’ பிரி​வில் நெதர்​லாந்​து, மலேசி​யா, இங்​கிலாந்​து, ஆஸ்​திரியா ஆகிய அணி​களும் ‘எஃப்’ பிரி​வில் பிரான்​ஸ், ஆஸ்​திரேலி​யா, கொரி​யா, வங்​கதேசம் ஆகிய அணிகளும் இடம்​பெற்​றுள்​ளன. லீக் சுற்​றில் ஒவ்​வொரு அணி​யும் தனது பிரி​வில் இடம் பெற்​றுள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும்.
லீக் சுற்​றின் முடிவில் ஒவ்​வொரு பிரி​விலும் முதலிடம் பிடிக்​கும் அணி​கள் கால்இறு​திக்கு முன்​னேறும். இந்த 6 அணி​களு​டன் லீக் சுற்​றில் 2-வது இடத்தை பிடிக்​கும் 2 சிறந்த அணி​களும் கால் இறுதி சுற்​றில் இணை​யும். கால் இறுதி ஆட்​டங்​கள் டிசம்​பர் 5-ம் தேதி சென்னையில் நடை​பெறுகிறது. தொடர்ந்து அரை இறுதி ஆட்டங்கள் டிசம்​பர் 7-ம் தேதி​யும் இறு​திப் போட்டி 10-ம் தேதி​யும் சென்​னை​யில் நடை​பெறுகின்​றன.