Home செய்திகள் தேசிய செய்திகள் ஜென் ஸீயை கவர பாஜக பிரச்சாரக் குழு

ஜென் ஸீயை கவர பாஜக பிரச்சாரக் குழு

புதுடெல்லி: ஆக. 23:
பாஜக​வின் தேசிய நிர்​வாகக் குழு அண்​மை​யில் அறிவிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து பாஜக​வின் புதிய தேசிய நிர்​வாகக் குழு​வின் உயர்​நிலைக் கூட்​டம், கட்​சித் தலை​வர் நிதின் நவீன் தலைமையில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.
இந்த கூட்​டத்​தில் நாடு முழுவதும் ஜென் ஸீ தலைமுறையினரை கவர்வதற்காக பிரசாரக் குழு அமைக்கப்பட்டது.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் தலைமையிலான இந்த குழுவில் ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, ஹர்ஷ் சங்வி, ஓ.பி. சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் வந்தே மாதரம் தேசிய பாடல் தொடர்​பான தீர்​மானம் நிறைவேற்​றப்பட்டது. அதில் கூறி​யிருப்​ப​தாவது:
காங்​கிரஸ் கட்சி நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலின் இரு சரணங்​கள் மட்​டுமே பாடப்​படும் என்று அந்த கட்​சி​யின் செயற்​குழு கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்டு உள்​ளது. இந்த முடிவை பாஜக மிக வன்​மை​யாகக் கண்​டிக்​கிறது.
கடந்த 1937-ம் ஆண்டு நடை​பெற்ற காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தில் இதே முடிவு எடுக்​கப்​பட்​டது. இதுவே இரு நாடு​கள் கொள்​கைக்கு வித்​திட்​டது. தேசத்​தந்தை காந்​தி​யடிகள், வந்தே மாதரம் பாடல் முழு​மை​யாகப் பாடப்​படு​வதை ஆதரித்​தார். ஆனால் இதற்கு முகமது அலி ஜின்னா கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார்.
பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு, வந்தே மாதரம் பாடலின் கவுர​வத்​தைக் காக்க பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக தேசிய கவுரவ அவம​திப்பு தடுப்பு (திருத்த) சட்​டம் கொண்டுவரப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் வந்தே மாதரம் தேசிய பாடலுக்கு சட்டப்​பூர்வ பாது​காப்பு வழங்​கப்​பட்டு இருக்​கிறது.
கடந்த சுதந்​திர தின விழா​வின்​போது செங்​கோட்​டை​யில் வந்தே மாதரம் தேசிய பாடல் முழு​மை​யாகப் பாடப்​பட்​டது. ஆனால் காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் சோனியா காந்தி தேசிய பாடலை அவம​தித்​தார். வாக்கு வங்கி அரசி​யலை முன்​னிறுத்தி சோனி​யா​வும் ராகுல் காந்​தி​யும் செயல்​படு​கின்​றனர்.
பாஜகவைப் பொறுத்​தவரை வந்தே மாதரம் தேசிய பாடலின் கவுர​வத்​தைக் காப்​போம். அதன் பாரம்​பரி​யத்​தைப் போற்​றிப் பாது​காப்​போம். இதுதொடர்​​பாக தேசிய அளவில்​ பிரம்​​மாண்​ட பிரச்​​சா​ரத்​தை மேற்​கொள்​வோம்​. இவ்​​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை பாஜகவின் புதிய நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.