ஜெய்ஸ்வாலுக்கு அகர்கர் உத்தரவு

மும்பை: ஆகஸ்ட் 15-
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது 2025 ஆசிய கோப்பை தொடருக்கான அணித் தேர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ரன் மழை பொழிந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடமில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது.
1 சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 2 சதங்களுடன் 411 ரன்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். டெஸ்ட் போட்டிகளில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜெய்ஸ்வால், ஆசிய கோப்பைக்கான டி20 அணியிலும் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.