ஜெய்ஸ்வால், கில் சதம் விளாசி அசத்தல்: முதல் நாளில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு

லீட்ஸ், ஜூன் 21- ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டுள்​ளது. இரு அணி​கள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்​டிங்​லி​யில் உள்ள லீட்ஸ் மைதானத்​தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.இந்​திய அணி​யின் இடது கை பேட்​ஸ்​மே​னான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்​சன் அறி​முக வீரராக இடம் பெற்​றார். இதே​போன்று 8 வருடங்​களுக்கு பிறகு கருண் நாயரும் அணிக்கு திரும்​பி​னார். வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக ஷர்​துல் தாக்​குரும், சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக ரவீந்​திர ஜடேஜா​வும் இடம் பெற்​றனர்.
வேகப்​பந்து வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா களமிறங்​கி​னார்​கள். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி நிதான​மான தொடக்​கம் கொடுத்​தது. இன்​ஸ்​விங், ஆஃப் ஸ்டெம்​பு​களுக்கு வெளியே வீசப்​பட்ட பந்​துகள், அவுட் ஸ்விங் என இங்​கிலாந்து வேகப்​பந்து வீச்​சாளர்​கள் தொடர்ச்​சி​யாக அழுத்​தம் கொடுக்க முயற்​சித்​தனர்.
ஆனால் ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி பொறுமை​யாக செயல்​பட்​டது.ஆஃப் திசையை குறி​வைத்து இரு​வரும் சீராக ரன்​கள் சேர்த்​தனர். இந்த ஜோடியை பிரிக்க பென் ஸ்டோக்ஸ் பந்​து​வீச்​சில் பல்​வேறு மாற்​றங்​களை கொண்​டு​வந்​தார்.
ஆனால் ஜெய்​ஸ்​வாலும், கே.எல்​.​ராகுலும் எந்​த​வித வாய்ப்​பு​களை​யும் வழங்​காமல் அற்​புத​மாக விளை​யாடி ரன்​கள் சேர்த்​தனர். ஆனால் முதல் செஷன் முடி​யும் தரு​வா​யில் கே.எல்​.​ராகுல் தனது விக்​கெட்டை எளி​தாக பறி​கொடுத்​தார். பிரைடன் கார்ஸ் வைடாக வீசிய பந்தை கே.எல்​.​ராகுல் கவர் டிரைவ் விளை​யாட முயன்​றார். ஆனால் பந்து மட்டை விளிம்​பில் பட்டு முதல் சிலிப் திசையில் நின்ற ஜோ ரூட்​டிடம் கேட்ச் ஆனது. கே.எல்​.​ராகுல் 78 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​கள் சேர்த்​தார். முதல் விக்​கெட்​டுக்கு ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி 24.5 ஓவர்​களில் 91 ரன்​கள் குவித்​தது. இதன் பின்​னர் களமிறங்​கிய அறி​முக வீர​ரான சாய் சுதர்​சன் 4 பந்​துகளை சந்​தித்த நிலை​யில் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​டமிழந்து ஏமாற்​றம் அளித்​தார். பென் ஸ்டோக்ஸ் லெக் திசை​யில் வைடாக வீசிய பந்தை சாய் சுதர்​சன் தட்​டி​விட முயன்​றார். ஆனால் அதை விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித் அற்​புத​மாக கேட்ச் செய்​தார்.