Home விளையாட்டு ஜோர்டானை வீழ்த்​தி​னார் அரவிந்த்

ஜோர்டானை வீழ்த்​தி​னார் அரவிந்த்

பிராக், மார்ச் 7- செக்​குடியரசின் பிராக் நகரில் சர்​வ​தேச பிராக்ஸ் செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதன் 8-வது சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அரவிந்த் சிதம்​பரம், நெதர்​லாந்​தின் ஜோர்​டான் வான் பாரஸ்டை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் அரவிந்த் சிதரம்​பரம் 63-வது காய் நகர்த்​தலின் போது வெற்றி பெற்றார். அதேவேளை​யில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.குகேஷ், ஜெர்​மனி​யின் வின்​செட் கீமருக்கு எதி​ரான ஆட்டத்தை 47-வது நகர்த்​தலின் போது டிரா செய்​தார். 8 சுற்றுகளின் முடி​வில் அரவிந்த் சிதம்​பரம் 4 புள்​ளி​களு​டன் 6-வது இடத்​தில் உள்​ளார்.