
பெங்களூர் செப். 23-
தமிழ்நாடு ஊடக பிரதிநிதிகள் குழுவினர், ஓன்றிய அரசின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி திரு.அருண் தலைமையில் கர்நாடக மாநிலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர். அக்குழுவினர் நேற்று பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்க அலுவலகம் மற்றும் சங்கத்தின் சார்பில் இயங்கி வரும் பா.சு.மணி நூலகத்திற்கு வருகை தந்தனர். சங்கத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சங்கத்தின் செயல்பாடுகளை ஊடக குழுவினர் வெகுவாக பாராட்டினர்.










